
உறங்கியது போதும் துள்ளி எழு தமிழா!
உண்மையில் நீ யார் என்றுணறு தமிழா!
பழம் பெருமை எங்களதை பக்கம் வை தமிழா!
இனி என்ன சாத்தியங்கள் என்பது எண் தமிழா!
சரித்திரம் படைப்பதற்கு வழிகள் வகு தமிழா!
சாதித்து நீ வாழ உறுதி கொள் தமிழா!
உன்னதனாய் வாழ்ந்திடவே உரமிடு தமிழா!
உன் உரிமை உன் பெருமை உலகறியும் தமிழா!
சொல்லிலும் எழுத்திலும் கருத்துனரு தமிழா!
ஈழத்தோர் என்பதுவே நம் மரபு தமிழா!
ஈழம் எனும் சொல் அதனை மையமிடு தமிழா!
பிரிவினை புகையதனை அணைத்து விடு தமிழா!
நம் நாடு நம் மக்கள் என்று சொல் தமிழா!
கரம் இணைத்து தடை கடந்து வெற்றி கொள் தமிழா!
நாம் எல்லாம் ஈழத்தோர் என்று உரை தமிழா!
நமது மொழி ஈழத்தமிழ் என்று கூறு தமிழா!
என் சாதி நான் மலை மட்டக்களப்பென்றும்
நான் யாழ் நான் வன்னி வட்டித்துறை என்றும்
உனக்குள்ள வேறு பாட்டை எரித்துவிடு தமிழா!
எறியாத சிலர் அவரை அகற்றிவிடு தமிழா!
ஒரு கருவில் உருவான பூக்கள் நாம் தமிழா!
என்பதனை உலகிற்கு அறியவை தமிழா!
மலரும் ஈழத்தில் மணந்திடுவோம் தமிழா!
என்றுனது மனதினில் நீ உறுதி கொள் தமிழா!
கசப்பு தரும் எழுத்து வார்த்தை தவிர்த்துவிடு தமிழா!
மற்றவர் உணர்வதையும் கருத்தில் வை தமிழா!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு மந்திரம் கொள் தமிழா!
வெற்றி உனைத் தேடிவரும் ஐயம் இல்லை தமிழா!
இவன்
ஈழன் இளங்கோ
சிட்னி, அவுஸ்திரேலியா.
No comments:
Post a Comment